வன்னி மண்ணின் பிரபல்யமான ஆங்கில எழுத்தாளரான யோகராசா அச்சுதனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “இலங்கை மண்ணின் தோற்றோர்” எனும் நூல் அண்மையில் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது.
யேர்மன், பிரெஞ்சு, டச்சு, போர்த்துகீசு, பொலிஸ் மற்றும் இத்தாலிய மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள குறித்த நூல் உலகின் பிரபல்யமான இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
பிரபல சிங்கள எழுத்தாளரான புண்ணியகாந்தி விஜயநாயக்கவினால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “காத்திருக்கும் பூமி” எனும் நூலினை விமர்சித்து எழுதப்பட்ட இந் நூல் சமூக முன்னேற்றத்திற்காக இலங்கை மக்கள் எதிர் கொண்ட தனிமனித மற்றும் சமூக பிரச்சனைகளை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து இலங்கை ஆங்கில இலக்கிய வளர்ச்சிக்கு வலுச்சேர்த்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
யோகராஜா அச்சுதன் “பாழாய்ப்போன வாழ்க்கை”, “அதிசய குணப்படுத்தல்” மற்றும் “அப்பாவே ” போன்ற நல்லிணக்கத்திற்கான ஆக்கங்கள் எனும் தொனிப்பொருளில் எழுதப்பட்ட ஆங்கில கவிதைகளின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாசகர் மனதில் இடம்பிடித்த இலங்கை தமிழ் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.