ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு, மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பத்மநாபாவின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்ன, மண்முனை மேற்குப் பிரதேச சபை உபதவிசாளர் பொன்னம்பலம் செல்லத்துரை மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் மத்திய குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
கடந்த 1990.06.19 ஆம் திகதியன்று,சென்னையில் ஈழமக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட 13 தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குறித்த தினத்தை தியாகிகள் தினமாகப் பிரகடனப்படுத்தி 1981ம் ஆண்டு முதல் அவர்களை நினைவு கூர்ந்து நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.