2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இருப்பினும் வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான படிவம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதுபோன்று, திருத்தப்பட்ட விண்ணப்பங்களை வீடுகளுக்கு அனுப்புவதற்கு பதிலாக, தரவுகளை கிராம உத்தியோகத்தர் மூலம் பெற்று ஆவணத்தை புதுப்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டினார்.
மேலும் வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் மாதம் நிறைவு செய்யப்படும் என்றாலும் நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக தாமதம் ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.