எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோட்டையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, பிட்டகோட்டேயில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்திலிருந்து, நாடாளுமன்ற கட்டடத் தொகுதிவரை வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும் மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக கினிகத்தேனை நகரிலும் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.