துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோத்தர் ஜூலை மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னால் நேற்று (திங்கட்கிழமை) குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதுடன் இதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதுடன் அவர் பயன்படுத்திய துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.