கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில், நிதி விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா தொற்று பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
இத்தகைய சூழலிலும், இந்திய மாநிலங்கள் கடந்த 2020 -2021 ஆம் ஆண்டு நிதியாண்டில் கூடுதலாக கடன் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் மட்டும் மாநிலங்கள் 1.06 இலட்சம் கோடியை கடனாக பெற்றுள்ளன.
மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஒத்துழைப்ப காரணமாகவே இது சாத்தியமானது. கடந்த ஆண்டில் தற்சார்பு இந்தியாவிற்கான தொகுப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் மாநில அரசுகள் கூடுதல் கடனைப் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மொத்த உள்மாநில உற்பத்தி மதிப்பில் கூடுதலாக 2 சதவீதம் வரை கடன் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சதவீத கடனை சில நிபத்தனைகளின் அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளார்.