ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பெறுவதற்காக நாட்டில் அரசியல் உறுதியற்ற தன்மையை உருவாக்கத் தயாராக இல்லை என அரசாங்கம் கூறுகிறது.
ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைத் தக்கவைக்க இராஜதந்திர மட்டத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
மேலும் அதே நேரத்தில் இலங்கை குறித்த சலுகையை இழந்தால் மாற்று வழிகள் குறித்து கவனம் செலுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அஜித் நிவாட் கப்ரால், கடந்த அரசாங்கம் சலுகையைப் பெறுவதற்காகாக தேசிய கொள்கையையும் நாட்டின் ஸ்திரத்தன்மையையும் சமரசம் செய்ததாகக் குற்றம் சாட்டினார்.
இருப்பினும் தற்போதைய அரசாங்கம் இறக்குமதியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் ஒரு நிலையான சூழலை உருவாக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.