முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 900 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு- கைத்திராமணி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, இராணுவ வைத்தியர்களின் உதவியுடன் சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள், ஆண்கள், வாகன சாரதிகள் மற்றும் சிற்றூழியர்கள் ஆகியோருக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) 582 பேருக்கும் நேற்று 318 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.