கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றன.
அந்தவகையில் யாழ்ப்பாணம் – புங்குடுதீவு, நடுத்துருத்தி கடற்கரையில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று நேற்று (வியாழக்கிழமை) கரையொதுங்கியுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் அறிந்து, இன்று காலை அப்பகுதிக்கு வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், கடலாமையினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் – வேலணை, துறையூர் கடற்கரையிலும் இறந்த நிலையில் கடலாமை ஒன்று அண்மையில் கரையொதுங்கி இருந்தது.
குறித்த கடலாமையினையும் உடற்கூற்று பரிசோதனைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் எடுத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.