நாட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முழுமையாக திறக்கக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
99ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
உலகளவில் பரவியுள்ள கொரோனா நோயைத் தடுப்பதற்கு தடுப்பூசிகளே தீர்வாக உள்ளன என்றும் மகிழ்ச்சியடையும் வகையில் இலங்கைக்கு இந்த மாதத்தில் 9 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
அவற்றை மக்களுக்கு செலுத்துவதன் மூலம் நாட்டை செப்டம்பர் மாதமளவில் முழுமையாக திறக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டைத் திறக்காவிட்டால் பொருளாதாரத்தை நடத்திச் செல்ல முடியாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.