யாழ்ப்பாணத்தில் லீ குழு மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகி இருந்த ஆவாகுழு தலைவர் உட்பட 3 சந்தேகநபர்களை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து வாள்கள், கோடரிகள், முச்சக்கரவண்டி ஒன்று மற்றும் மோட்டர் சைக்கிள் ஆகியவற்றையும் குற்ற விசாரணைப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அண்மையில் கோண்டாவில் பகுதியிலுள்ள ஒருவர் மீது வாள்வெட்டுதாக்குதல் இடம்பெற்றதில் அவரின் கை துண்டிக்கப்பட்டு, அதனை வைத்தியர் ஒருவர் 6 மணிநேர சத்திர சிகிச்சையில் பொருத்தியுள்ளார்
குறித்த சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் தலைமையில், தலைமறைவாகிய சந்தேகநபர்களை தேடி சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மீசாலை காட்டுப்பகுதி மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒழித்திருந்த நிலையில் ஆவாகுழு தலைவன் உட்பட 3 சந்தேகநபர்களை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை ஆவா குழுவில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதிலிருந்து சிலர் பிரிந்து சென்று, லீ குழு என்ற பெயரில் செயற்பட்டு வந்துள்ளனர் இந்நிலையில் லீ குழு மீது, ஆவாகுழுவினர் கோண்டாவில் பகுதில் வைத்து தாக்குதலை மேற்கொண்டதில் லீ குழுவைச் சேர்ந்த ஒருவர் கை துண்டிக்கப்பட்டது என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.