இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக மன்னாரிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூட்டைகள், பொலிஸாரினால் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் கட்டி மூட்டைகளே தாராபுரம் காட்டு பகுதியில் வைத்து தீயிட்டு, நேற்று (திங்கட்கிழமை) அழிக்கப்பட்டுள்ளது.
அதாவது 28 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட 777 கிலோ 600 கிராம் உலர்ந்த மஞ்சள், சுகாதார நடைமுறையை பின்பற்றி தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.