ஒன்றுகூடும் உரிமையானது பொதுமக்கள் அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்தும் உரிமையை உள்ளடக்கியது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட பலர் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் மேற்கண்டவாறு கூறினார்.
அதில், தமது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் ஒன்றுகூடும் உரிமையில் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், பொது சுகாதாரத்தின் நியாயமான பாதுகாப்பிற்கு அப்பால் செல்லக்கூடாது எனவும் ஹனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.