கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தாலும், அதன் பரவல் வேகம் 15 நாட்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து சென்னை மருத்துவ அறிவியில் மையத்தின் சீதாபரா சின்ஹா தெரிவிக்கையில், ‘கொரோனா பரவல் குறித்து கணித ரீதியில் ஆய்வு செய்து வருகிறோம்.
மே மாதம் 15 – ஜுன் மாதம் 20 வரை வைரஸ் பரவல் வேகம் 0.78 சதவீதமாக இருந்தது. ஜுன் மாதம் 20 – ஜுலை 7ஆம் திகதிவரை இது 0.88 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதாவது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 100 பேர் மேலும் 88 பேருக்கு வைரஸ் தொற்றை பரப்புகின்றனர். அதனால் மக்கள் அதிகளவில் கூட ஆரம்பித்துள்ளனர்.
கணக்கின்படி ஒரு சதவீதத்துக்கும் அதிகமாக பரவல் இருந்தால் அது ஆபத்து. நாட்டின் மொத்த சராசரி ஒன்றுக்கும் கீழே உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.