பொருளாதாரத்தில் பின்னடைவுகள் இருந்தாலும் சிறுவர்களின் எதிர்காலத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், கொரோனா தொற்றினால் கடந்த சில மாதங்களாக அரசாங்கம் 286 பில்லியன் ரூபாயினை செலவிட்டுள்ளது என கூறினார்.
சுற்றுலாத்துறையிலிருந்து 4 முதல் 5 பில்லியன் ரூபாய் வரையும் ஆடைத் துறையிலிருந்து 1.7 பில்லியனும் என அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேநேரம் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன நிலையில் தங்களது பரீட்சை மற்றும் தங்களின் எதிர்காலம் குறித்து மாணவர்கள் கவலை கொண்டுள்ளனர்.
இந்த சுமைகள் அனைத்தும், சிறுவர்களின் கல்விக்கு தடையாக இருக்க அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.