கொரோனா வைரஸ் (கொவிட்-19) விதிகள் தளர்த்தப்படும் போது, திங்கட்கிழமை முதல் பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டுமா என்பதை பேருந்து மற்றும் ரயில் நிறுவனங்கள் தீர்மானிக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
வைரஸ் தொற்று பரவுவதைக் குறைக்க கடந்த ஒரு வருடமாக பொது போக்குவரத்தில் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக உள்ளன.
ஆனால், அந்த விதிகள் அரசாங்க வழிகாட்டுதலுடன் மாற்றப்படும். பயணிகளுக்கு பிஸியான சேவைகளில் மட்டுமே முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்துகின்றன.
அந்த ஆலோசனையை அமுல்படுத்தலாமா, எப்படி என்பதை தீர்மானிக்க போக்குவரத்து நிறுவனங்கள் முற்படும்.
பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் இன்னும் பரிந்துரைக்கப்படும் என்று சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் கூறினார்.
ஆனால், ஜூலை 19ஆம் திகதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் முகக்கவசம் அணியாதவர்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது.