நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது 29 சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம் விவசாயிகளின் தொடர் போராட்டம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, தடுப்பூசிகள் தட்டுப்பாடு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளுக்கு அமைய குறித்த கூட்டத்தொடரில் பங்கேற்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.