இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 38 ஆயிரத்து 325 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 11 இலட்சத்து 43 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 3 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஆதேநேரம் 4 இலட்சத்து 28 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் 501 பேர் நேற்று உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 14 ஆயிரத்தை கடந்துள்ளது.