ரஃபேல் தொடர்பான விசாரணைகளை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான விசாரணையை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது.
பிரதமரே நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். அனைத்து தரப்பினரையும் உளவு பார்க்க பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒட்டுகேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமித்ஷா பதவி விலக வேண்டும். எனது தொலைப்பேசியையும் பெகாசஸ் மென்பொருள் மூலமாக ஒட்டுக்கேட்டுள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டிய ஆயுதமாகவே பெகாசஸ் மென்பொருளை இஸ்ரேல் வகைப்படுத்தியுள்ளது. ஆனால் பிரதமரும் உள்துறை அமைச்சரும் நமது அமைப்புகளுக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர்’ எனத் தெரிவித்தார்.