சாதாரண கொரோனா வைரஸின் செறிவைவிட, டெல்டாவின் செறிவு ஆயிரம் மடங்கு அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
சாதாரண கொரோனா வைரஸுடன் அடையாளம் காணப்படுகின்ற தொற்றாளர்களது வைரஸ் செறிவைக் காட்டிலும், டெல்டாவுடன் அடையாளம் காணப்படுகின்றவர்களின் வைரஸ் செறிவு 1,000 மடங்கு அதிகமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக பரவல் வேகமும், பாதிப்பு வீதமும் மிக அதிகமாக இருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.