இந்த வருடம் ஏப்ரல் முதல் ஜுன் வரையான காலப்பகுதிக்குள் வன்முறை சம்பவங்கள் ஊடாக பாகிஸ்தானில் 203 இறப்புகள் மற்றும் 966 கடுமையான காயங்கள் ஏற்பட்டமை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் பாதுகாப்பு அதிகாரிகளின் உயிரிழப்புக்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2021 ஆம் ஆண்டின் 2ஆவது காலாண்டின் பாதுகாப்பு அறிக்கையில், ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் மையம் (சி.ஆர்.எஸ்.எஸ்) இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும் பலூசிஸ்தான் (74), ஃபாட்டா (39), சிந்து (39), கேபி (35), பஞ்சாப் (8), இஸ்லாமாபாத் (4), மற்றும் 4 கூடுதல் இடங்களில் வன்முறையால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ஏப்ரல் மாதத்தில் டி.எல்.பி எதிர்ப்பாளர்களால் நடத்தப்பட்ட வன்முறையால் எவரும் பாதிக்கப்பட்டார்களா என்பது தெரியவில்லை.
கேபி மற்றும் ஃபாட்டா இறப்புகளை இணைத்து பலூசிஸ்தானின் இறப்பு 74 ஆகும். பஞ்சாப் மற்றும் முன்னாள் ஃபாட்டா வன்முறையில் கணிசமான வீழ்ச்சியை சந்தித்தன. (முறையே 64% மற்றும் 43% குறைந்துள்ளது), பலூசிஸ்தான் மற்றும் சிந்துவில் 50% வன்முறைகள் பதிவாகியுள்ளன.
இந்த காலாண்டில் கேபி (ஃபாட்டாவைத் தவிர) 9% ஓரளவு உயர்ந்துள்ளது. இதனைத் தவிர காயமடைந்தவர்களின் எண்ணிக்கையில் முன்னோடியில்லாத வகையில் எழுச்சி ஏற்பட்டது.
தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தான், ஒரு அவதூறு தொடர்பான பிரச்சினையில் நாடு தழுவிய வன்முறை போராட்டத்தின் விளைவாக நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 800 பேர் காயமடைந்தனர்.
இலக்கு கொலைக்கு துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது வன்முறையில் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான ஆயுதமாகவே இருந்தது மற்றும் நாட்டின் அனைத்து பகுதிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த காலாண்டில் பொதுமக்களும் வன்முறை சம்பவங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். சட்டவிரோதமானவர்களின் (போராளிகள், குற்றவாளிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள்) இறப்புகளின் எண்ணிக்கையிலும் சதவீதத்திலும் மிகக் குறைவான வீழ்ச்சியை அவதானிக்க கூடியதாக உள்ளது.
பாதுகாப்பு ஊழியர்களின் இறப்புகள் மொத்த இறப்புகளில் 30% ஆகும். பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் ஒருங்கிணைந்த சதவீதம் இரண்டாவது காலாண்டில் 73% ஆக உள்ளது, இது முதல் காலாண்டில் 71% ஆக இருந்தது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.