கடலில் கப்பல்களுக்கு வழிகாட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய வசதிகளை வரையறுக்கும் கடல் வழிகாட்டு சட்டமூலம் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தை கப்பல் போக்குவரத்துதுறை அமைச்சர் சர்பானந்த சோனவால் நேற்று (திங்கட்கிழமை) ராஜ்யசபாவில் தாக்கல் செய்துள்ளார்.
கப்பல் போக்குவரத்து குறித்து ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தை நீக்கி புதிய சட்டமூலம் ஒன்றை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதனையடுத்து இது குறித்த புதிய சட்டமூலம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.