இந்திய எல்லைக்குள் டிரோன் ஊடாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டமைக்கு இந்தியா கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் எல்லைப்பகுதியில் சண்டை நிறுத்த உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதனால் அண்மைக்காலமாக எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை காணப்பட்டு வருகின்றமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதில் இரு நாடுகளினதும் இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போதே டிரோன் விமானத் தாக்குதல் தொடர்பாக இந்தியா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இந்த டிரோன் விமானத் தாக்குதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளபோதிலும், இருநாட்டு இராணுத்தினரும் எல்லையில் தொடர்ந்து அமைதியைக் கடைபிடிக்க உறுதிப்பூண்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.