இலங்கையில் நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மாத்திரம் 4 இலட்சத்து 12 ஆயிரத்து 111 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இதன்போது, 3 இலட்சத்து 66 ஆயிரத்து 622 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாம் டோஸ் செலுத்தப்பட்டது.
மேலும் 35 ஆயிரத்து 720 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது.
அதேநேரம், ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்றையதினம் 39 பேருக்கு செலுத்தப்பட்டது.
மேலும் மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் நேற்றையதினம் 69 ஆயிரத்து 830 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.