ஷாங்காய்க்கு தெற்கே சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் 100 கி.மீ வேககத்தில் சூறாவளி தாக்கியது.
கடலுக்கு அருகில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டதுடன் விமானங்களும் ரயில்களும் இரத்து செய்யப்பட்டு, பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டது.
இதேவேளை 250-350 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகும் என்றும் தேசிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக தாய்வானில் குறித்த சூறாவளி தாக்கியது என்றும் இதனால் இறப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.