பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘உளவு விவகாரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்குப் பதிலாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்துவது சிறப்பாக இருக்கும்.
பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அரசு உளவு வேலையில் ஈடுபட்டது உண்மையா, இல்லையா என்பதை அவர்தான் தெளிவுப்படுத்த வேண்டும்.
சட்டவிரோதமாக எந்த உளவு வேலையிலும் அரசு ஈடுபடவில்லை என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியுள்ளார். ஆனால் உளவு வேலையே நடக்கவில்லை என்று அவர் மறுக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.