முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முசலி பிரதேச செயலகத்துக்கு முன்பாக வை.எப்.சி அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பூனாட்சிகுளம், பண்டாரவெளி போன்ற பகுதிகளிலுள்ள அரச காணிகள் தனியார் சிலரால் அடாத்தாக பிடிக்கப்படுவதாகவும் இதனால் அப்பகுதியிலுள்ள மக்களுக்கும், இளைஞர்களுக்கும் காணிகள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் எனவே இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் விரைவில் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயத்தினை வலியுறுத்தும் வகையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும் காணிகளை விடுவித்து காணியில்லாத ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கவும், காணி அத்துமீறலை உடனே நிறுத்து, அடாவடி காணி பிடித்தலை உடனடியாக நிறுத்தவும், அடாத்தாக காணி பிடித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், எமது பகுதியில் பணம் படைத்தவர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களே காணிகளை அபகரிக்கின்றனர் போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.