வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட கடன்களுக்கான ஒரு பில்லியன் டொலர் தவணைக் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
உலக நாடுகள் பல கொரோனா தொற்றினால் பொருளாதார சரிவை சந்தித்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் சிறந்த முறையில் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார்.
அதன்படி எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நேற்று (26) செலுத்த வேண்டிய தவணைப் பணத்தை செலுத்தியுள்ளதாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
வெளிநாட்டு கடன்கள் தொடர்பாக விமர்சங்களை முன்வைத்தவர்களினால் அவற்றினை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து எந்தவொரு திட்டத்தையும் முன்வைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.