கொரோனா வைரஸ் தொற்று பற்றிய உண்மைகளை பொய்யாக்கி மூடிமறைக்கும் சீனா, பெய்ஜிங் தொற்றுநோய் தோற்றம் பற்றிய ஆதாரங்களை அழித்துவிட்டது என அமெரிக்க செனட்டர் டொம் கொட்டன் கடுமையாக சாடியுள்ளார்
மேலும் இந்த விடயம் தொடர்பான சாட்சிகள் மற்றும் சான்றுகள் அநேகமாக காணாமல் போயிருக்கலாம். ஆகவே நாங்கள் ஒரு உறுதியான பதிலைப் பெறுவது சாத்தியமில்லை என ஃபாக்ஸ் நியூஸுக்கு வழங்கிய நேர்காணலில் டொம் கொட்டன் கூறியுள்ளார்.
மேலும் ஒரு தொற்றுநோய் கூட இல்லை என்று மறுத்ததற்காக அவர் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளரையும் விமர்சித்து பேசியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் ஆரம்பத்தில் இருந்தே சீனாவின் பின் பாக்கெட்டில் இருந்தார். அவர்கள் தான் இந்த ஆண்டு தொடக்கத்தில் வுஹானுக்கு போனி கமிஷனை விசாரணை மேற்கொள்வதற்கு அனுப்பியவர்கள் என டொம் கொட்டன் மேலும் கூறினார்.
இதேவேளை பெய்ஜிங்கிற்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்காத அமெரிக்க ஜனாதிபதியையும் அவர் கடுமையாக சாடினார்.
சீனாவின் ஏற்றத்தை குறைக்க ஜனாதிபதி பிடன் என்ன செய்வார் எனவும் டொம் கொட்டன் கேள்வி எழுப்பினார்.
இந்த பிளேக்கை உலகிற்கு கட்டவிழ்த்துவிட்டதற்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் அமெரிக்காவுக்கான முடிவுகளை எடுக்க அமெரிக்க மக்கள் ஜோ பிடன் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தனர், ஆனால் அரசாங்கம் இந்த முடிவுகளை பொது சுகாதார அதிகாரிகளின் கூட்டமாக மாற்றியுள்ளது.
அண்மையில் சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம், இரண்டாம் கட்ட விசாரணைக்கு WHO திட்டத்தை நிராகரித்தது. அதன்பின்னர், அமெரிக்கா இந்த முடிவுக்கு ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது மற்றும் அது ‘ஆபத்தானது’ என்றும் கூறியது.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வைரஸின் தோற்றம் குறித்து ஆராய சீனாவுக்குச் சென்ற WHO தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, சீனா முன்னதாக என்ன ஆராய்ச்சி நடத்துகிறது என்பது பற்றிய தெளிவான விடயத்தை அறிய போராடியதாக கூறப்படுகின்றது.