ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து பணம் எடுப்பதற்கு எந்த விதமான வரியையும் விதிப்பதற்கு திட்டமிடவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதனை தெரிவித்தார்.
மேலும் ஊழியர் சேம நிதிக்கு வரி விதிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகள் பொய்யானவை என்றும் குறிப்பிட்டார்.