இலங்கையில் நேற்று 2 இலட்சத்து 48 ஆயிரத்து 656 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
23,135 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டதாகவும் 1,021 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 69,041 பேருக்கு முதல் சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டதுடன் 153,678 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், 711 பேருக்கு பைசர் தடுப்பூசியின் முதல் டோஸும் 75 பேருக்கு இரண்டாவது டோஸும் 995 பேருக்கு முதல் மொடர்னா தடுப்பூசி டோஸும் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையில் தடுப்பூசி நடவடிக்கை தொடங்கியதில் இருந்து இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி 10,986,524 பேருக்கும் 2,778,714 பேருக்கும் முழுமையாகவும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.