இந்தியாவில் கட்டப்பட்டுள்ள சல்மா அணையை சேதப்படுத்த தலிபான் பயங்கரவாதிகள் முயன்றதை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகள் பலத்த இழப்பை சந்தித்ததாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதுகாப்புப் படையினர் எதிர் தாக்குதலை தொடர்ந்து நடத்தியமையினால், தலிபான் பயங்கரவாதிகள் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஃபவாத் அமன் டுவீட் செய்துள்ளதாவது, “சல்மா அணை மீதான தலிபான் தாக்குதல் தோல்வியடைந்துள்ளது.
தலிபான் பயங்கரவாதிகள், ஹெராத் மாகாணத்திலுள்ள சல்மா அணை மீது தாக்குதல் நடத்தியது.
இதன்போது படையினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த அவர்கள் அதிர்ஷ்டவசமாக அப்பகுதியை விட்டுச் தப்பிச் சென்றுள்ளனர்” என டுவிட் செய்துள்ளார்.
வெளிநாட்டுப் படைகள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியதிலிருந்து ஆப்கானிஸ்தானில் சமீபகாலமாக வன்முறை அதிகரித்து வருகிறது.
மேலும் தலிபான்கள், நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்ற ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.