ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஜம்மு – காஷ்மீரின் உயர் அதிகாரியான தில்பக் சிங் கூறுகையில், ‘நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் – இ- தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மிகப்பெரிய அளவில் பயங்கரவாத செயலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.