இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 641 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 20 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 12 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 3 இலட்சத்து 94 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் நேற்று ஒரேநாளில் 519 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது.