வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனாவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியானது.
அதனையடுத்தே அவருடன் பழகியவர்களை சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் பத்திநாதனின் பிரியாவிடை வைபவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
அதில் தற்போதைய பிரதம செயலாளர் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களில் சிலருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் நிர்வாக தேவைகள் நிமித்தம் வடக்கு மாகாண அமைச்சுக்களின் அதிகாரிகள். திணைக்கள அதிகாரிகள் பலரும் பிரதம செயலாளருடன் தொடர்பினை கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.