இலங்கையில் நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 76 ஆயிரத்து 694 பேருக்கு, சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ், 2 இலட்சத்து 17ஆயிரத்து 962 பேருக்கு நேற்று செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 8 இலட்சத்து 69ஆயிரத்து 853 பேருக்கு இதுவரை செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று ஸ்புட்னிக் ஏ தடுப்பூசியின் முதலாவது டோஸ் 1 இலட்சத்து 59ஆயிரத்து 081 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 14 ஆயிரத்து 516 பேருக்கும் இதுவரை செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 2 இலட்சத்து 51ஆயிரத்து 963 பேருக்கு செலுத்தப்பட்டுள்ள அதேவேளை மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் 7 இலட்சத்து 61ஆயிரத்து 136 செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையிலுள்ள சீன பிரஜைகள் 2 இலட்சத்து 865 பேருக்கு, சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதுடன் இரண்டாவது டோஸ் 2 ஆயிரத்து 435 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.