கொரோனா வைரஸ் தொற்று விரைவாக பரவி வருகின்றமையினால், அதனை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி, கொவிட் கட்டுப்பாட்டு செயலணியுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
குறித்த கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் நாட்டை முழுமையாக முடக்குமாறும் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் சுகாதார பிரிவினர் தொடர்ச்சியாக அரசாங்கத்தை கோரி வருகின்றனர்.
ஆகவே, இன்று நடைபெற்றவுள்ள குறித்த கூட்டத்தில் சுகாதார பிரிவினரின் கோரிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.













