ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக புதிய இ-விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம் பேசி இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் இந்தியர்கள், அமெரிக்க, ஐரோப்பிய ஒப்பந்தகாரர்களின் கீழ் பணிபுரியும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், நமது நாட்டுடன் பாரம்பரியமாக தொடர்புடைய ஆப்கானியர்களை அழைத்து வருவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் முறையான பயண ஆவணங்கள் இல்லாதவர்களுக்கும் இ-விசா வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக அவசரகால இ-விசா என்ற புதிய விசா வகை உருவாக்கப்பட்டு விரைவான முறையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.