ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 200 அமெரிக்கர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர்.
மேலும் தலிபான்கள், அங்கு ஆட்சியமைப்பதற்கான பல்வேறு பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 200 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
இதில் நேற்று மட்டும் 13 விமானங்களில் ஆயிரத்து 100 பேர் காபூலில் இருந்து அமெரிக்கா அழைத்துவரப்பட்டுள்ளனர் என்றும் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.