பதுளை நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களை இன்று முதல் தொடர்ந்து ஒரு வாரகாலம் மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, கொரோனா தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு பண்டாரவளை நகர வர்த்தக நிலையங்களை கடந்த 16ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.