இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு, கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் ஓகஸ்ட் மாதத்திற்கான சம்பளத்தை கொரோனா நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு எதிராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எடுக்கும் கடினமான நடவடிக்கைக்கு உதவும் வகையில் குறித்த நிதியை வழங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கொரோனா நிதிக்கு ஒகஸ்ட் மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கோரிக்கையை விடுத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.