கொரோனா வைரஸ் தொற்றினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராத நிலையில் பாடசாலைகளை திறக்கும் விடயத்தில் நிதானம் காட்டுமாறு மத்திய, மாநில அரசுகளை டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலை, பேராசிரியர் நவீத் விக் கோரியுள்ளார்.
மத்திய, மாநில அரசு பாடசாலைகளை திறக்கும் விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, பாடசாலை மாணவர்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பதுடன் போக்குவரத்து வகுப்புகளில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதிலும் சிக்கல்கள் இருக்கின்றதென பேராசிரியர் நவீத் விக் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில் அடுத்த 2 மாதங்களில் பண்டிகைக்காலம் வருவதையும் மத்திய, மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கல்வியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 56 பேர் பாடசாலைகளை விரைவில் திறக்குமாறு பிரதமர் மோடிக்கும் மாநில முதலமைச்சர்களுக்கும் கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளனர் எனவும் பேராசிரியர் நவீத் விக் குறிப்பிட்டுள்ளார்.