இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் மீது விதித்திருந்த பயணத்தடையை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நீக்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
டெல்டா கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு, அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்திருந்தது.
இந்நிலையிலேயே குறித்த நாடுகளுக்கு விதித்திருந்த பயணத் தடையை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
எனினும், நாட்டுக்கு வருபவர்கள் 2 வாரம் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.