இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதன்படி ஒக்சிஜன் சிலிண்டர்களை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டன் ஒக்சிஜன் சிலிண்டர்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லிண்டே இந்தியா நிறுவனம் மூன்றில் ஒரு பங்கி ஒக்சிஜனை தயாரிக்க மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்மூலம் வயதானோர் உயிரிழப்பதை தடுக்க முடியும் என நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.