கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த வைரஸ் 188 பேருக்கு பரவி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், நிபா வைரஸால் முதலில் பாதிக்கப்பட்டது சிறுவன்தானா, அந்த சிறுவனுக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பது குறித்து அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுவன் மூலம் 188 பேருக்கு வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் 20 பேர் நிபா வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் குறித்த 20 பேரிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மகாராஷ்டிரா மாநிலம் புணேயில் உள்ள தேசிய தீநுண்மி ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.