கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 2.3 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள 4,200 ஒக்சிமீட்டர்களைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியை இலங்கை சுங்க அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
ஒரு துப்புரவு முகவராக தன்னை அடையாள படுத்திகொண்டு குறித்த நபர் அதிகாரிகளுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஒக்ஸிமீட்டர்களின் ஏற்றுமதி செய்ய முற்பட்டுள்ளார்.
தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அல்லது இலங்கை சுங்கத்திற்கு பொருந்தும் வரிகளைச் செலுத்தாமல் குறித்த பொருட்களை கொண்டு செல்வதை அறிந்த சுங்க தடுப்பு பிரிவின் அதிகாரிகள் அதனை இடைமறித்தனர்.
இதன்போது 2,344,642 ரூபாய் பெறுமதியான 21 பெட்டிகளில் நிரம்பிய 4,200 ஒக்சிமீட்டர்களின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து சந்தேகநபர் கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் செப்டம்பர் 21 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை சுங்க தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.