தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்து இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் தனியாகச் செயற்படவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியா தமிழரசுக்கட்சி அலுவலகத்திற்கு நேற்று வருகை தந்திருந்த நிலையில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இருப்பினும் ஏனைய கட்சிகள் வேறாக செயற்பட்டு வருவது தொடர்பாக தாங்கள் அவர்களோடு பேச்சுவார்த்தையை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி எந்தவிதமான கடிதமும் அனுப்பவில்லை என்றும் அவர் சுட்டிக்கானார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பால் அதனுடைய தலைவர் இரா.சம்பந்தனின் கையொப்பத்துடன் மட்டுமே ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது என்றும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.