இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதுவர் அலெக்ஸ் இலிஸ், மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துள்ளார்.
இதன்போது, மராட்டிய மாநிலத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான வர்த்தகம், சுகாதாரம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பின்போது மராட்டிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரேயும் இருந்துள்ளார்.
மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் இங்கிலாந்து தூதுவர் சந்தித்து, கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த சந்திப்பிற்கு பின்னர் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை பார்வையிட்ட அலெக்ஸ் இலிஸ், அங்கு வழிபாடு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.