சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பசுமை வாயு வெளியீட்டைக் குறைக்க மத்திய அரசு தீர்மானித்தது.
இதேபோன்று ரயில்வே நிர்வாகமும் 2030ஆம் ஆண்டுக்குள், கார்பன் வெளியீடு இல்லாத பசுமைப் போக்குவரத்துக்காக ரயில் போக்குவரத்தை மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
அதாவது, இருபக்கமும் டீசலால் இயங்கும் இன்ஜின்கள் உள்ள ரயில் தொடரில், குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஒப்பந்தம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த திட்டத்தின் ஊடாக வருடந்தோறும் 2 கோடியே 30 இலட்சம் அளவிலான எரிபொருள் செலவுகளை குறைக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.