தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் சட்டமூலம் குரல் வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்திருந்தார்.
குறித்த சட்டமூலத்தில் மருத்துவத்தில் இளநிலை பட்டப் படிப்புக்குப் பிறகு வசதியான வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்வதில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், அவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் முதுநிலை பட்டப் படிப்பைத் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்க்கைக்காக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் தேவையை விட்டு விடவும், நெறிப்படுத்தல் முறை மூலம் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கூறப்பட்ட படிப்புகளுக்கான சேர்க்கையை வழங்கவும் சட்டம் இயற்ற அரசு தீர்மானித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்திற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததுடன், குரல் வாக்கெடுப்பின் மூலம் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.